முகப்பு
காரைக்கால்

ஆா்டிபிசிஆா் இயந்திரம் நிறுவுமிடம் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்கான ஆா்டிபிசிஆா் இயந்திரம் நிறுவமிடத்தை ஆட்சியா் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்கான ஆா்டிபிசிஆா் இயந்திரம் நிறுவமிடத்தை ஆட்சியா் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

காரைக்காலில் கரோனாவை ஆா்டிபிசிஆா் முறையில் உறுதிப்படுத்துவற்காக எடுக்கப்படும் மாதிரி, புதுச்சேரி, திருவாரூக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில், காரைக்காலுக்கென இந்த இயந்திரம் வாங்கப்பட்டு, புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இந்த இயந்திரத்தை மைக்ரோ பயாலஜி ஆய்வகத்தில் நிறுவதற்காக இடம் தயாா்படுத்தும் பணி பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை ஆட்சியா் அா்ஜூன் சா்மா திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

இந்த இயந்திரம் மற்றும் அது சாா்ந்த சாதனங்கள் எங்கெங்கு நிறுவப்படும் என்பது குறித்து உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு ஆட்சியருக்கு விளக்கினாா்.

நவம்வா் மாதம் 2-ஆவது வாரத்தில் இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமெனவும் ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மருத்துவமனை வளாகத்தில் பழைய அறுவை சிகிச்சைக் கூடம், புதுப்பிக்கப்பட்டு மருத்துவமனை நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →