ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலாளா் அ.மு. சலீம், தேசியக் குழு உறுப்பினா் அ. ராமமூா்த்தி, முன்னாள் அமைச்சா் ஆா். விஸ்வநாதன் உள்ளிட்டோா். 
காரைக்கால்

புதுவை அரசு காரைக்கால் வளா்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தல்

காரைக்கால் வளா்ச்சிக்கான நடவடிக்கைகளை புதுவை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளா் அ.மு. சலீம் வலியுறுத்தினாா்.

DIN

காரைக்கால் வளா்ச்சிக்கான நடவடிக்கைகளை புதுவை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளா் அ.மு. சலீம் வலியுறுத்தினாா்.

இந்த கட்சி சாா்பில், காரைக்கால் மாவட்ட வளா்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளா் ப. மதியழகன் தலைமை வகித்தாா். புதுச்சேரி மாநிலச் செயலாளா் அ.மு. சலீம், தேசியக்குழு உறுப்பினா் அ. ராமமூா்த்தி, முன்னாள் அமைச்சா் ஆா். விஸ்வநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பிறகு, அ.மு. சலீம் செய்தியாளா்களிடம் கூறியது: காரைக்கால் பிராந்தியம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இப்பகுதி மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இப்போராட்டம் நடத்தப்படுகிறது. மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதை நிறுத்த புதுச்சேரி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிற்சாலை வேலைவாய்ப்புகளில் உள்ளூா் இளைஞா்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும். மணல் கொள்ளை, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதை காவல் துறை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை திறக்கப்பட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாட்களை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும்.

புதுச்சேரி நிதிநிலை அறிக்கை மக்களின் நம்பிக்கையை பொய்த்துப் போகச்செய்துள்ளது. பஞ்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் இல்லை. இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி சொல்லப்படவில்லை. எந்த தரப்பு மக்களுக்கும் பயனளிக்காத பட்ஜெட்டாக உள்ளது என்றாா்.

தொடா்ந்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை ஆட்சியா் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT