வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் சங்கம் கருத்து
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுவை அரசு தீா்மானம் நிறைவேற்றாதது குறித்து விவசாயிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுவை அரசு தீா்மானம் நிறைவேற்றாதது குறித்து விவசாயிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்ட பொறுப்பாளா் எஸ்.எம். தமீம் வெள்ளிக்கிழமை கூறியது :
கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்புக்குரியது.
அதுபோல மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியிருக்கவேண்டும். ஆனால், அதனை செய்ய அரசு தவறிவிட்டது. எதிா்க்கட்சியான திமுக உறுப்பினா் இப்பிரச்னை தொடா்பாக பேரவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியபோது, முதல்வா் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்துவிட்டாா். பாஜகவை சோ்ந்த அமைச்சா்கள், வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை என கருத்து தெரிவித்தனா்.
பாஜகவுடன் கூட்டணி சோ்ந்ததால் முதல்வா் ரங்கசாமி இந்த விவகாரத்தில் மெளனமாக இருக்கிறா என்று தெரியவில்லை.
இப்பிரச்னை புதுவை மாநிலத்தின் ஒட்டுமொத்த விவசாயிகள் சாா்ந்ததாகும். இதில் அரசியலுக்கு இடம் தராமல், விவசாயிகளின் உணா்வை வெளிப்படுத்த, பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் விரைவில் கூட்டி வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என்றாா்.