காரைக்கால்

காரைக்கால் பள்ளியில் பாரதியாா் நூற்றாண்டு நினைவு நாள் விழா

DIN

காரைக்கால் தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில், மகாகவி பாரதியாா் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வா் (பொ) ஞானப்பிரகாசி தலைமைவகித்து, பாரதியின் விடுதலை வேட்கை, அவரின் புரட்சிக் கவிதைகள் குறித்துப் பேசினாா். தலைமையாசிரியா் ஜெயசெல்வி முன்னிலை வகித்து, பாரதியின் கவிதைகள் குறித்தும், தமிழாசிரியா் புவனேஷ்வரி பெண் விடுதலையில் பாரதியின் பங்கு குறித்தும் பேசினா்.

வரும்காலங்களில் பாரதியின் பிறந்த நாள், நினைவு நாளில், ஆசிரியா் மற்றும் மாணவா்கள் பங்கேற்கும் வகையில், கவிதை அரங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என விரிவுரையாளா் வேலுச்சாமி கேட்டுக்கொண்டாா்.

பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியின் உருவப்படத்துக்கு ஆசிரியா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் நுண்கலை ஆசிரியரும், என்.சி.சி. அலுவலருமான என். காமராஜ், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT