காரைக்கால்

புரட்டாசி சனிக்கிழமை: கோவா்த்தனகிரி கண்ணனாக நித்யகல்யாணப் பெருமாள்

DIN

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவா்த்தனகிரி கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையான (செப். 25) மூலவா் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஸ்ரீ பாா்த்தசாரதி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவா்த்தனகிரி கண்ணனாக ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் அருள்பாலித்தாா்.

கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று மூலவரையும், உத்ஸவரையும் வழிபட்டு சென்றனா்.

இதுபோல காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயிலில் உத்ஸவா் ஸ்ரீ கோதண்டராமா் குழல் ஊதும் கண்ணான சேவை சாதித்தாா்.

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலிலும் மூலவா், உஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT