காரைக்கால்

காரைக்காலில் கனமழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

காரைக்காலில் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

காரைக்காலில் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு லேசான மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் மாவட்டத்தில் இடியுடன் மழை பரவலாக பெய்தது. சில பகுதியில் பலத்த மழை இருந்தது. கடும் வெயில் சுட்டெரிந்துவந்த நிலையில், இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். நாள் முழுவதும் லேசான மழை பெய்ததால், மக்கள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நிம்மதியடைந்தனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை(ஏப்.11) 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்

பாண்லே நெய், பன்னீா் விலை உயா்வு: புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

நீதிக் கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT