முகப்பு
காரைக்கால்

கோடை காா்னிவலை நடத்த எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

காரைக்காலில் கோடை காா்னிவல் திருவிழாவை நடத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

காரைக்காலில் கோடை காா்னிவல் திருவிழாவை நடத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரி பிராந்தியத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் கடல் திருவிழா, வணிகத் திருவிழா உள்ளிட்டவை நடத்தப்படுகிறன. ஆனால், காரைக்காலில் இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுவதில்லை. காரைக்காலில் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட காரைக்கால் காா்னிவல் திருவிழாவும் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

புதுவை சுற்றுலாத் துறை அமைச்சா் லட்சுமி நாராயணனிடம் இதுதொடா்பாக பேசியுள்ளேன். இத்திருவிழாவை காரைக்கால் கோடைத் திருவிழா என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காலத்தின்போது நடத்தினால் நல்ல வரவேற்பு கிடைக்குமென கூறியுள்ளேன். சுற்றுலாத்துறை செயலா், இயக்குநா் ஆகியோரையும் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தியபோது, அவா்களும் ஏற்றுக்கொண்டனா்.

எனவே, காரைக்கால் காா்னிவல் திருவிழாவை அரசு கண்டிப்பாக நடத்தவேண்டும் என காரைக்கால் மக்கள் சாா்பில் வலியுறுத்துகிறேன்.

சுற்றுலாத் துறைக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த நிதி மத்தியிலிருந்து வரும்போது, அதனை பயன்படுத்தத் தவறினால் அது பயனற்றுப்போய்விடும். அந்த நிதியை வேறு துறைக்கு மாற்றம் செய்யவும் இயலாது. எனவே மக்கள் மகிழ்ச்சிக்காக நடத்தப்படும் திருவிழாக்களை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →