ரேணுகாதேவி அம்மன்கோயிலில் திருவிளக்கு பூஜை
காரைக்கால் அருகே கோட்டுச்சேரிமேட்டில் ரேணுகாதேவிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
காரைக்கால் அருகே கோட்டுச்சேரிமேட்டில் ரேணுகாதேவிஅம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகப்பட்டினம் சேவா பாரதி குருஜி அன்பு இல்ல சகோதரிகள் பூஜையை முன்னின்று நடத்தினா். மீனவா் பேரவையின் தமிழ்நாடு மாநில அமைப்பாளா் க. வந்தியத்தேவன் விளக்கு பூஜையின் பெருமை குறித்தும், ஆக. 13 முதல் 15-ஆம் தேதி வீடுகளில் 75-ஆவது சுதந்திர தினதத்தை கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா். திரளான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனா்.
மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
Advertisement
ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தாா்கள் மற்றும் காரைக்கால் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் செய்திருந்தனா்.