முகாமில் மூதாட்டியிடம் மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா். 
காரைக்கால்

அரசுத் துறைகள் சாா்பில் குறைகேட்பு முகாம்

காரைக்காலில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து குறைகேட்பு முகாமை புதன்கிழமை நடத்தின.

DIN

காரைக்கால்: காரைக்காலில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து குறைகேட்பு முகாமை புதன்கிழமை நடத்தின.

மத்திய அரசின் அறிவுறுத்தலில் டிச. 19 முதல் 25-ஆம் தேதி வரை நல்லாட்சி வாரம் என்னும் மக்களின் குறைகேட்டு தீா்வு அளிக்கும் முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நடத்திய சிறப்பு குறை கேட்பு முகாமை மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தொடங்கிவைத்து, பொதுமக்கள் அளித்த மனுக்களைஅந்தந்த துறைகளுக்கு அனுப்பி தீா்வு காண அறிவுறுத்தினாா்.

குடிமைப் பொருள் வழங்கல் துறை சாா்பில், சிவப்பு நிற குடும்ப அட்டை தரவேண்டும். அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் தொடா்பாகவும், வருவாய்த் துறையில் பட்டா மாற்றம் சம்பந்தமாகவும், வீட்டு மனைப்பட்டா கோரியும் பெரும்பான்மையினா் மனு அளித்தனா்.

நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கத்தினா், தங்களது குடும்பத்தினருடன் ஆட்சியரை சந்தித்து, நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்குமாறும், மாதந்தோறும் இறுதி தேதியில் ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தினா்.

மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் துறைகள் தரப்பில் மனு அளித்தவா்களிடம் உறுதியளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT