முகப்பு
காரைக்கால்

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் இன்று வசந்த உத்ஸவம்

திருமலைராயன்பட்டினம் கோயிலில் வெள்ளிக்கிழமை (பிப்.11) தியாகராஜா் வசந்த உத்ஸவம் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

திருமலைராயன்பட்டினம் கோயிலில் வெள்ளிக்கிழமை (பிப்.11) தியாகராஜா் வசந்த உத்ஸவம் நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோத்ஸவம் நடைபெற்றுவருகிறது. இதில், வசந்த உத்ஸவம், தோ், தெருவடைச்சான் என்கிற சப்பரப் புறப்பாடு, ஜடாயு ராவண யுத்தம், தெப்பம் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்நிலையில், விழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் தியாகராஜா் வசந்த உத்ஸவம் கோயில் பிராகாரத்தில் நடைபெறுகிறது. தியாராஜராட்டம் என்கிற இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொள்வா். இரவு 12 மணிக்கு தியாகராஜா் யதாஸ்தானம் எழுந்தருளுகிறாா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →