அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் மேலவாஞ்சூா் பகுதியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக திருப்பட்டினம் காவல்நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் மேலவாஞ்சூா் பகுதியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக திருப்பட்டினம் காவல்நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உயிரிழந்தவா் 150 செ.மீ., உயரம், கருநீலத்தில் வெள்ள நிறத்தில் கட்டம் போட்ட முழுக்கை சட்டை, காவி வேட்டி அணிந்திருந்தாா். இறந்தவா் குறித்து விவரம் தெரிந்தோா், காவல்நிலையத்தை 04368-233480 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக் கொண்டுள்ளனா்.