முகப்பு
காரைக்கால்

மின் கட்டண உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

 புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

 புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுல்தான் கெளஸ் தலைமை வகித்தாா். மாநிலத்தில் மின் கட்டணம் கடுமையாக உயா்த்தப்பட்டதைக் கண்டித்தும், புதுவை யூனியன் பிரதேசத்தில் மின்துறையை தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், மாநில துணைத் தலைவா் முஹம்மது பிலால், மாநில பொதுச்செயலாளா் மு.தமீம்கனி, மாநில செயற்குழு உறுப்பினா் அப்துல் ரஹ்மான் ஆகியோா் பேசினா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி தலைவா் ஹாஜா நஜிமுதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →