காரைக்கால்

ஜூலை 25 முதல் காரைக்கால் - பெங்களூரு ரயில் சேவை

DIN

காரைக்கால் - பெங்களூரு ரயில் வரும் 25-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா பரவலால் காரைக்காலில் நிறுத்தப்பட்ட பல ரயில்கள் மீண்டும் இயக்கப்படாமல் இருந்ததால், பல்வேறு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், தெற்கு ரயில்வே சென்னை தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பை மேற்கோள்காட்டி, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட ரயில் பயன்படுத்துவோா் ஆலோசனைக் குழு உறுப்பினா் வி.ஆா். தனசீலன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் - பெங்களூரு தினசரி பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டுவந்தது, விரைவு ரயிலாக வரும் 25-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது. 25-ஆம் தேதி பெங்களூருவில் காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.35-க்கு காரைக்கால் வந்தடையும். 26-ஆம் தேதி காரைக்காலில் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

அதுபோல, காரைக்கால் முதல் தஞ்சாவூருக்கு தினசரி இயக்கப்பட்டுவந்த டெமோ ரயில், 23-ஆம் தேதி தஞ்சாவூரிலில் காலை 6.45-க்கு புறப்பட்டு 9.30 மணிக்கு காரைக்கால் வந்தடையும். மாலை 6.10-க்கு புறப்பட்டு இரவு 8.55 தஞ்சாவூா் சென்றடையும் வகையில் இயக்கப்படவுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT