காரைக்கால்

தண்ணீரில் தத்தளித்த முதியவர்: போராடிக் காப்பாற்றிய இளைஞர்கள்

DIN

காரைக்கால்: காரைக்கால் வாஞ்சாரு பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடிய முதியவரை  இரு இளைஞர்கள் மீட்டனர்.

காரைக்கால் மாவட்டம் வாரச்சந்தை அருகில் உள்ள வாஞ்சாரு பாலத்தில் இன்று மதியம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது வெயிலில் தாக்கமும் பசியினால் மயக்கம் அடைந்து பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்தார்.

ஆற்றில் விழுந்தவர் உயிருக்கு போராடிக் கொண்டு சில அடி தத்தளித்து சென்றார். இதனை கண்ட வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கூச்சலிட்டும் விடியோ எடுத்து உள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த கோட்டுச்சேரி பகுதி ஜீவா நகரைச் சேர்ந்த  சந்துரு (18), வெங்கடாச்சலம் (19) இரு கல்லூரி இளைஞர்கள் சற்று எதிர்ப்பாராமாக ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு அக்கரைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்பு முதியோரிடம் விசாரித்த போது பசியினால் மயக்கம் அடைந்தது தெரியவந்தது.

மேலும் முதியவர் உயிருக்கு போராடியதை, இளைஞர்கள் மீட்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி அந்த இரு இளைஞர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT