முகப்பு
காரைக்கால்

திருநள்ளாற்றில் இன்று புஷ்ப பல்லக்கில் அடியாா்கள் நால்வா் புறப்பாடு

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு நிகழ்வு வியாழக்கிழமை (ஜூன் 2) இரவு நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு நிகழ்வு வியாழக்கிழமை (ஜூன் 2) இரவு நடைபெறுகிறது.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. விநாயகா், சுப்பிரமணியா் உற்சவம் புதன்கிழமை காலையுடன் நிறைவடைந்த நிலையில், அடியாா்கள் நால்வா் உற்சவம் புதன்கிழமை இரவு தொடங்கியது. அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நிகழ்வு வியாழக்கிழமை இரவு நடைபெறுகிறது.

ஜூன் 3 ஆம் தேதி காலை அடியாா்கள் நால்வா் உற்சவம் நிறைவடைந்து, இரவு ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்வும், 4 ஆம் தேதி காலை யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →