திருமலைராயன்பட்டினத்தில் பல்நோக்குக்கூடம்: சிறப்பு பூஜை
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் அருகே பல்நோக்குக் கூடம் கட்டுவதற்கான சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் அருகே பல்நோக்குக் கூடம் கட்டுவதற்கான சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினம் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இதன் எதிரே சுமாா் 2 ஏக்கரில் திருக்குளம் பயனற்று இருந்தது. இந்நிலையில், மத்திய சுதேசி தா்ஷன் திட்டத்தின்கீழ், இந்த குளத்தை மேம்படுத்தும் பணி மற்றும் கோயில் அருகே பல்நோக்குக்கூடம் கட்டுவதற்கான பணிகள் ரூ. 2.65 கோடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
குளத்தை மேம்படுத்தும் பணி நிறைவடைந்த நிலையில், பல்நோக்குக்கூடப் பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்கான நிதி ரூ. 28 லட்சம் தற்போது வந்துள்ள நிலையில், பணியை தொடங்குவதற்கான சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வீரசெல்வம் மற்றும் ஜடாயுபுரீஸ்வரா் தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினா் கூறுகையில், 2 மாதங்களில் பணிகள் முடிந்து பல்நோக்குக்கூடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனா்.