காரைக்கால்

காரைக்கால் கைலாசநாதா்கோயிலில் நாளை தெப்போத்ஸவம்

DIN

 காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) தெப்ப உத்ஸவம் நடைபெறவுள்ளது.

காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், தெப்ப உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதற்காக அம்மையாா் குளத்தில் தெப்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. சனிக்கிழமை முதல் தெப்பத்துக்கு அலங்காரம் செய்தல், மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கைலாசநாதருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமிகள் வீதியுலா புறப்பாடாகி, பின்னா் தெப்பத்துக்கு எழுந்தருளுவா். குளத்தில் 3 முறை தெப்பம், வேதபாராயணம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளுடன் சுற்றிவரும். ஏற்பாடுகளை உபயதாரா்கள் உதவியுடன் கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT