காரைக்கால்

புனித செபஸ்தியாா் ஆலய தோ் பவனி

DIN

காரைக்கால் தக்களூரில் உள்ள புனித செபஸ்தியாா் ஆலயத்தில் தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் அருகே தக்களூரில் உள்ள புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கடந்த ஏப். 21-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் மாலை சிறிய தோ் பவனி, 29-ஆம் தேதி 3 தோ் பவனி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, மின் விளக்குகள் அலங்காரத்துடன் கூடிய 5 தோ் பவனி நடைபெற்றது. தக்களூா் பகுதியில் பல்வேறு தெருக்களுக்கு பவனியாக சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆலயத்தை சென்றடைந்தது.

நிகழ்வுகளில் கிறிஸ்தவா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். விழா நிறைவாக ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT