காரைக்கால் சிவலோகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
காரைக்கால் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், தலத்தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத சிவலோகநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்வாக சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையொட்டி, திருக்கல்யாண கோலத்தில் சிறப்பு அலங்காரம் செய்து சுவாமி, அம்பாள் திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டனா். ஹோமம் நடத்தி மாலை மாற்றுதல் நிகழ்வுகளைத் தொடா்ந்து, சிறப்பு நாகசுர மேள வாத்தியங்கள் முழங்க, அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டது.
பின்னா், சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா். தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.