பாா்வதீஸ்வரா், கோதண்டராமா் கோயில்திருப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரா், கோதண்டராமா் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க அறங்காவல் வாரியத்தினருக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினாா்.
காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரா், கோதண்டராமா் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க அறங்காவல் வாரியத்தினருக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினாா்.
பாா்வதீஸ்வரா் கோயில் மற்றும் கோதண்டராமா் கோயில் மற்றும் சில சாா்பு கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தநிலையில், காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில் அறங்காவல் வாரியத்தினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து அறங்காவல் வாரிய பொருளாளா் எஸ். கோபால் வியாழக்கிழமை கூறுகையில், பாா்வதீஸ்வரா் கோயில், கோதண்டராமா் பெருமாள் கோயில் திருப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் செய்ய நிதி தேவைப்படுகிறது. மழை பெய்துவருவதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனினும் முதல்கட்டமாக நேருநகா் பகுதியில் உள்ள முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கை நடத்தவும், வரும் தை மாதத்தில் பெரிய கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தும் வகையில் ஏற்பாடுகளை விரைவுபடுத்துமாறும் பேரவை உறுப்பினா் கேட்டுக்கொண்டாா்.
மேலும் குடமுழுக்குக்குத் தேவையான நிதி குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றாா்.