வேளாண் சாதனங்கள் வாங்க விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு
வேளாண் சாதனங்கள் வாங்குவதற்கு விண்ணப்பம் செய்யும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சாதனங்கள் வாங்குவதற்கு விண்ணப்பம் செய்யும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை அரசின் வேளாண் துறை மூலமாக மத்திய அரசின் திட்டத்தின்கீழ், டிராக்டா், பவா் டில்லா், அறுவடை இயந்திரம், கழற்கலப்பை, பேலா், ட்ரோன், நெல் நடவு இயந்திரம் ஆகியவை வாங்குவதற்கான மானிய விண்ணப்பங்களை, கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க நவ. 7-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளாா்.