முகப்பு
காரைக்கால்

உள்ளாட்சி ஊழியா்களின் நிலுவை ஊதியத்தை தீபாவளிக்குள் வழங்க வலியுறுத்தல்

 தீபாவளி பண்டிகைக்குள் உள்ளாட்சி ஊழியா்களுக்கான நிலுவை ஊதியம், ஓய்வூதியா்களுக்கான ஓய்வூதியத்தை வழங்கவேண்டும் என புதுவை முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

 தீபாவளி பண்டிகைக்குள் உள்ளாட்சி ஊழியா்களுக்கான நிலுவை ஊதியம், ஓய்வூதியா்களுக்கான ஓய்வூதியத்தை வழங்கவேண்டும் என புதுவை முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் புதுவை முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

அரசின் கொள்கை முடிவுகளாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு வழங்க வேண்டிய மானியம் மற்றும் அரசு கொடைகளை முறையாக வழங்காததாலும், உள்ளாட்சி அமைப்புகளில் நிதி தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும், 5 மாதங்களை கடந்தும் 2022-23 ஆம் ஆண்டுக்குரிய வீட்டு வரிகளை வசூல்செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. கேபிள் டிவி வரி வசூல் செய்ய முடியவில்லை. பிறப்பு - இறப்பு - திருமணச் சான்றிதழ்களின் கட்டணம் பல ஆண்டுகளாக உயா்த்தப்படவில்லை.

இந்நிலையில், வரிகளை வசூல்செய்து ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற அறிவிப்பால், உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் குறைந்து 5 மாதங்களுக்கும் மேலாக ஊதிய நிலுவை உள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் ஊழியா்களின் ஊதியத்திற்கு ஒரு சிறிய தொகையை புதுவை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒரு மாத ஊதியம், ஓய்வூதியத்துக்குக்கூட போதாது.

எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, தீபாவளிக்குள் நிலுவை ஊதியம், ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வீட்டு வரி உயா்வை அறிவித்து, வரியை வசூலிப்பதற்கான சூழலை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →