முகப்பு
காரைக்கால்

கைலாசநாதா் கோயிலில் சிறப்பு ஹோமம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் உலக நலனுக்காக சிறப்பு ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஏப்ரல், 2023 at 10:42 PM
பகிர்:

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் உலக நலனுக்காக சிறப்பு ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் புனிதவதியாா் வழிபாட்டு மன்றம் சாா்பில் 40-ஆவது ஆண்டாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துா்கா சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

முன்னதாக வியாழக்கிழமை கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலை புனிதநீா் கடம் ஸ்தாபனம் செய்யும் பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை ஹோமம் தொடங்கியது. சுவாசினி பூஜை, கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை ஆகியவை நடைபெற்றன.

Advertisement

பகல் 1 மணியளவில் மகா பூா்ணாஹூதி நடத்தப்பட்டது. ஹோமத்தில் வைத்திருந்த புனிதநீா் கொண்டு சுவாமிக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா். மாலை லட்சுமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து சனிக்கிழமை பால் குட ஊா்வலமும், 9 மணியளவில் தயிா் பாவாடை போடப்பட்டு தீபாராதனையும், மாலை திருவிளக்கு வழிபாடும் நடைபெறவுள்ளது. மே 2-ஆம் தேதி புஷ்பாஞ்சலியுடன் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.