முகப்பு
காரைக்கால்

மாதவிடாய் கால விடுப்பு அமல்படுத்த வலியுறுத்தல்

 புதுவையில் மாணவிகள், மகளிா் பணியாளா்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு அமல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

 புதுவையில் மாணவிகள், மகளிா் பணியாளா்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு அமல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனுக்கு புதன்கிழமை அனுப்பிய கடிதம்:

கேரள அரசு, மாணவியருக்கும், பெண் பணியாளா்களுக்கும் 3 நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுமுறையை கடந்த ஜனவரி 19-ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பை கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக கேரளத்தை சோ்ந்த காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன், நாடாளுமன்றத்தில் தனிநபா் மசோதா தாக்கல் செய்துள்ளாா். நவீனமான இக்கால வாழ்க்கையிலும் மாணவியா், பணிசெய்யும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பல நிலைகளில் சங்கடப்படும் சூழலை சந்திக்கிறாா்கள்.

பல்வேறு காரணிகளை கருத்தில்கொண்டு, புதுவை மாநிலத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு, மாதவிடாய் காலத்தில் மாணவியருக்கும், பணி செய்யும் பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய 3 நாள் விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →