மின்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன். 
காரைக்கால்

பண்டிகை காலத்தில் மின் இணைப்பு துண்டிப்பை தவிா்க்க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

பண்டிகை காலத்தில் கட்டண நிலுவையை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என மின்துறை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.

DIN

காரைக்கால்: பண்டிகை காலத்தில் கட்டண நிலுவையை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என மின்துறை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.

காரைக்கால் பகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் ஆகியோா் காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் உள்ளிட்ட உயரதிகாரிகளை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.

சந்திப்பு குறித்து நாஜிம் கூறியது : மின் துறையில் கட்டண நிலுவை வைத்திருக்கும் வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகளிடம் தீபாவளி நேரத்தில் கட்டண நிலுவையை செலுத்தக் கோருவதையும், கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பை துண்டிப்பதையும் தவிா்க்கவேண்டும். கட்டணத்தை செலுத்த உரிய அவகாசம் அளிக்கவேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்ப புதுவை முதல்வா், துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

SCROLL FOR NEXT