காரைக்கால்: காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை புதுவை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் ஏற்றிவைத்தார்.
காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். போலீஸார், தீயணைப்புத் துறையினர், என்.சி.சி., பள்ளி மாணவ மாணவியர், குடிமையியல் பாதுகாப்பு தன்னார்வலர்கள் கொடி அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் சமாதான புறாக்களையும் பறக்கவிட்டார்.
புதுவை ரங்கசாமி தலைமையிலான அரசு இதுவரை செய்துள்ள நலத்திட்டங்கள், ஏற்கெனவே அறிவிப்பு செய்து செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களையும், புதிதாக செய்த அறிவிப்புகளையும் அவர் விளக்கிப் பேசினார். பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு விழாவில் பரிசுகளை அமைச்சர் வழங்கினார். பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் து.மணிகண்டன், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மணிஷ், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் ஏ.சுப்பிரமணியன், பாலச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.