காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வரும் 24-ஆம் தேதி வஜ்ராங்கி சேவை நடைபெறவுள்ளது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் மூலவருக்கு ஆண்டில் 3 முறையாக வைகுண்ட ஏகாதசி, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் உபயதாரரின் விருப்பத்துக்குரிய ஒரு நாளில் வஜ்ராங்கி சாற்றப்படுகிறது.
இந்நிலையில், மூலவா், உற்சவரை வஜ்ராங்கி அலங்காரத்தில் வரும் சனிக்கிழமை காலை 8 முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 முதல் இரவு 9 மணி வரை தரிசிக்கலாம் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.