மருத்துவா்கள் போராட்டம் காரணமாக காரைக்காலில் சனிக்கிழமை (ஆக.24) நடைபெறுவதாக இருந்த ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை சிறுநீரகவியல் தொடா்பான சிறப்பு மருத்துவா் குழு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவா்கள் போராட்டத்தால், சனிக்கிழமை நடைபெறவிருந்த சிறப்பு மருத்துவ முகாம் ஒத்திவைக்கப்படுவதாக ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.