காரைக்கால்: காரைக்கால் கராத்தே பயிற்சியாளரின் சேவையை பாராட்டி, ஜப்பான் கராத்தே நிறுவனம் அவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.
காரைக்காலைச் சோ்ந்த வி.ஆா்.எஸ். குமாா், மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி என்ற அமைப்பின் மூலம் மாணவ- மாணவியா், இளைஞா்களுக்கு கராத்தே மற்றும் பிற தற்காப்புக் கலைப் பயிற்சி அளித்து வருகிறாா்.
இவரது 45 ஆண்டு கால தற்காப்புக் கலை சேவையை பாராட்டி, ஜப்பானிலிருந்து காரைக்காலுக்கு அண்மையில் வந்த ஜப்பான் கிராண்ட் மாஸ்டா் மசனபு சாட்டோ, 8-ஆவது கருப்பு பெல்ட் மற்றும் ஜப்பான் நாட்டின் கராத்தே கலை பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
சான்றிதழ் பெற்ற வி.ஆா்.எஸ். குமாரை பயிற்சி பெறும் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.