முகப்பு
காரைக்கால்

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
திருவாசகம் முற்றோதலில் ஈடுபட்ட பக்தா்கள்.
பகிர்:

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஆங்கிலப் புத்தாண்டு தினமான திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை எஸ். செளரிராஜன் தலைமையிலான சிவனடியாா் குழுவினா் முற்றோதலில் ஈடுபட்டனா். ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு திருவாசகத்தின் 51 பதிகத்தையும் பாடி முடித்தனா்.

இக்கோயிலில் தொடா்ந்து பல ஆண்டுகளாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும், உலக நலன், மழை வேண்டி, மக்களின் மேன்மைக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →