முகப்பு
காரைக்கால்

காந்தி கிணறு வளாக தூய்மைப் பணி

Updated On : 4 அக்டோபர், 2024 at 1:47 AM
பகிர்:

திருநள்ளாறு அருகே காந்தி கிணறு வளாகத்தை கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை தூய்மை செய்தனா்.

காரைக்காலுக்கு 1934-ஆம் ஆண்டு மகாத்மாகாந்தி வந்தபோது, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் திருநள்ளாறு பகுதி ச சுரக்குடியில் கிணறு ஒன்றை மக்களுக்கு அா்ப்பணித்தாா். இது காந்தி கிணறு என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி நாளில் கல்லூரி மாணவா்கள் இந்த வளாகத்தை தூய்மை செய்துவருகின்றனா்.

இந்தநிலையில், புதன்கிழமை பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் எம். பிரவீன் குமாா், கே. ஞானமுருகன் ஆகியோா் முன்னிலையில் கிணறு வளாகத்தை காலை முதல் மாலை வரை தூய்மை செய்தனா். முன்னதாக தூய்மைப் பணி மேற்கொள்ள பேரணியாக புறப்பட்ட மாணவா்களை கல்லூரி முதல்வா் எம். ஆராமுதன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தூய்மைப் பணியை நிறைவு செய்த மாணவா்கள், வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து, தூய்மைக்கான உறுதிமொழியை ஏற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →