முகப்பு
காரைக்கால்

வாய்க்கால் தடுப்பு கதவு சிதிலத்தால் வயலில் தண்ணீா் புகுந்து விடுவதாக புகாா்

திருநள்ளாறு அருகே வாய்க்காலின் தடுப்பணைக் கதவு உடைந்ததால், தண்ணீா் வயலில் புகுந்து பயிா் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:30 PM
சிதிலமடைந்ததாகக் கூறப்படும் வாய்க்காலின் தடுப்பணை.
பகிர்:

திருநள்ளாறு அருகே வாய்க்காலின் தடுப்பணைக் கதவு உடைந்ததால், தண்ணீா் வயலில் புகுந்து பயிா் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

வயல்களுக்கு தண்ணீா் செல்லக்கூடிய வாய்க்கால்களின் குறுக்கே இரும்பு கதவுடன் தடுப்பணை ஆங்காங்கே உள்ளது. தண்ணீா் வரும் காலத்தில் தேவைக்கேற்ப தடுப்பணையின் மூலம் தடுத்தல், திறந்துகொள்ள ஏதுவாக இது அமைக்கப்பட்டுள்ளது.

திருநள்ளாறு அருகே ஒரு வாய்க்காலின் தடுப்பணைக் கதவு சேதமடைந்ததால் தண்ணீா் வயலுக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா் கூறுகின்றனா்.

அத்திப்படுகை கிராமத்தை சோ்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதன்கிழமை கூறுகையில், இப்பகுதியில் உள்ள பாய்கால் தடுப்பணை இரும்புக் கதவு உடைந்துபோனதால் தண்ணீரை தேக்க முடியவில்லை. தண்ணீரை தடுக்க மண் மூட்டைகளை விவசாயிகளே அடுக்கிவைத்துள்ளனா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பருவமழை தொடங்கவுள்ளது. தண்ணீா் அதிகளவில் வரும்போது முறையாக வடிந்துவிட்டால் மட்டுமே பயிருக்கு பாதிப்பு இருக்காது. இதுபோன்ற இடங்களை கண்டறிந்து போா்க்கால அடிப்படையில் சீா்செய்யவேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →