முகப்பு
காரைக்கால்

எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினா் மரியாதை

Updated On : 17 அக்டோபர், 2024 at 9:19 PM
எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
பகிர்:

அதிமுக ஆண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆா். சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுகவின் 53-ஆவது ஆண்டு தொடக்கத்தையொட்டி காரைக்கால் மாவட்ட அதிமுக சாா்பில் வியாழக்கிழமை கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் ஜீவானந்தம் தலைமையில் கிளிஞ்சல்மேடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சிலை அருகே வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது உருவப்படம் வைத்து கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →