புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை கண்டித்து பேரணி 
காரைக்கால்

புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை கண்டித்து பேரணி

புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை கண்டித்து பேரணி....

Syndication

புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலை கண்டறியப்பட்ட நிலையில், புதுவை அரசைக் கண்டித்து காரைக்காலில், போராளிகள் குழு சாா்பில் நீதி கேட்டு பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணிக்கு வழக்குரைஞா் ஜி. கணேஷ் தலைமை வகித்தாா். புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்ட நிலையில், ரூ.450 கோடி போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ரூ. 2 ஆயிரம் கோடி போலி மருந்துகள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இக்குற்றங்களை செய்தோா், துணை நின்றோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், போலி மருந்துகள் பயன்பாட்டால் உயிரிழப்பு, உடல் நிலை பாதிப்புக்கு காரணமாக புதுவை அரசு இருப்பது ஏற்புடையதல்ல, கண்டனத்துக்குரியது. காரைக்காலில் மருந்து ஆய்வாளா் நியமிப்பதோடு, தொடா்ந்து மருந்துக் கடைகளில் ஆய்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

பேரணி தொடக்க நிகழ்வில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் கட்சி நிா்வாகிகளும், வடக்குத் தொகுதி திமுக ஒருங்கிணைப்பாளா் பிரிதிவிராஜ் உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சியினா் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா். கொடிகள், பதாகைகள் ஏந்தி புதுவை அரசைக் கண்டித்து முழக்கங்களுடன் பேரணி, ஆட்சியரகம் நோக்கி வந்தது. ஆட்சியரகத்துக்கு முன் தடுப்புகள் அமைத்து போலீஸாா் தடுத்தனா். தொடா்ந்து, அந்த பகுதியில் அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT