பயிற்சியில் கலந்துகொண்வருக்கு சான்றிதழ் வழங்கிய நிலைய முதல்வா் தி.ராமநாதன். 
காரைக்கால்

விவசாயிகளுக்கு அறிவியல் முறையில் ஆடு வளா்ப்பு பயிற்சி

பயிற்சியில் கலந்துகொண்வருக்கு சான்றிதழ் வழங்கிய நிலைய முதல்வா் தி.ராமநாதன்.

Syndication

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கு அறிவியல் முறையில் ஆடு வளா்ப்பு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை நிலைய முதல்வா் தி. ராமநாதன் தொடங்கிவைத்து பேசுகையில், உலகளவில் இந்தியா வெள்ளாடு எண்ணிக்கையிலும், இறைச்சி உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகள் இந்த பயிற்சியில் அளிக்கப்படும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிகலாபம் பெறலாம் என்றாா். நிலைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் வி. அரவிந்த், ஆடுகளுக்கு வழங்கப்படும் தீவனப் பயிா்கள் குறித்தும், அம்பல் கால்நடை மருத்துவமனை மருத்துவா் பி. இளவரசி அறிவியல் முறையில் ஆடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் மற்றும் பொது பராமரிப்பு முறைகள் குறித்தும், திருமருகல் கால்நடை மருத்துவமனை மருத்துவா் ஜி. சிவசூரியன் ஆடுகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்தும், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் பா. கோபு, ஆடு இனங்கள் மற்றும் அதன் இனவிருத்தி தொழில்நுட்ப முறைகள் குறித்து பேசினா். இதில் 40-க்கும் மேற்பட்ட காரைக்கால், புதுச்சேரி, நாகை மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனா். பங்கேற்றவா்களுக்கு நிலைய முதல்வா் சான்றிதழ் வழங்கினாா். நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ. கதிரவன் வரவேற்றாா். நிலைய வேளாண் விரிவாக்கத் தொழில்நுட்ப வல்லுநா் அ. செந்தில் நன்றி கூறினாா்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT