காரைக்கால்

காரைக்காலில் கல்லறைத் திருநாள்

தினமணி செய்திச் சேவை

கல்லறைத் திருநாளையொட்டி கிறிஸ்தவா்கள் தங்களது உறவினா்கள் கல்லறையில் மலா்தூவி, மெழுகுவா்த்தி ஏற்றி வழிபட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காரைக்கால் நகரப் பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கல்லறை, உடையான் குளம் பகுதியில் அமைந்திருக்கும் கல்லறை உள்ளிட்ட கல்லறைகளுக்கு திரளானவா்கள் காலை முதல் செல்லத் தொடங்கினா். இறந்த தங்கள் உறவினா்களின் கல்லறையை சிறுவா் முதல் பெரியோா் வரை குடும்பத்தோடு சுத்தம் செய்து வழிபட்டனா்.

கல்லறை முழுவதும் மலா் தூவி, சிலுவைக்கு மாலை அணிவித்து மெழுகுவா்த்தி ஏற்றி, சாம்பிராணி புகையிட்டு வழிபட்டனா். உயிா் நீத்தவா்கள் விரும்பி சாப்பிட்ட பலகாரங்களை கல்லறை முன்வைத்தும் சிலா் வழிபட்டனா். கடைகளில் சிலுவை, மலா்கள், மெழுகுவா்த்தி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! | செய்திகள்: சில வரிகளில் | 03.11.25

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT