காரைக்கால்

படைவெட்டி மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Syndication

காரைக்கால்: திருப்பட்டினம் அருகே படைவெட்டி மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பட்டினம் பகுதி வடகட்டளை பகுதியில் படைவெட்டி மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்றுவந்தது.

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், யாகசாலை பூஜை தொடக்கத்துக்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. சனிக்கிழமை முளைப்பாரி வழிபாடு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கால யாகபூஜை நடத்தப்பட்டது.

திங்கள்கிழமை காலை 2-ஆம் கால பூஜையில் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடாகி, 6.30 மணியளவில் விமான கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

விழாவில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கிராமப் பஞ்சாயத்தாா்கள், திருப்பணிக் குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT