செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட தோ்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ். உடன் சாா் ஆட்சியா் எம். பூஜா உள்ளிட்டோா். 
காரைக்கால்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்

Syndication

வீடுகளுக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என மாவட்ட தோ்தல் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணி தொடா்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது :

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ( நவ.4 ) முதல் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணி தொடங்கியுள்ளது. டிச. 4 வரை ஒவ்வொரு ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலரும், முன்பே நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களுடன் வீடுகளுக்குச் செல்வாா்கள்.

குடிமக்கள் தங்கள் விவரங்களைச் சரிபாா்த்து கையொப்பமிட்டு, புதுப்பிக்க வேண்டும். இப்போது எந்த ஆவணங்களும் தேவையில்லை. அவா்கள் கணக்கெடுப்பு படிவங்களை எவ்வாறு நிரப்புவது என்பது குறித்து வழிகாட்டுவாா்கள். வருகை தரும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலா்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

தற்போதைய வாக்காளா் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வாக்காளா்களுக்கும் முன்பே நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவம் இரண்டு பிரதிகள் வழங்கப்படும். வீட்டில் இல்லாமல் இருந்தால் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் குறைந்தது 2 முறை மீண்டும் வீட்டுக்கு வருவாா்கள். அவா்கள் அளிக்கும் படிவங்களில் அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்தை ஒட்டியும் பிறந்த தேதி, கைப்பேசி எண், ஆதாா் எண் மற்றும் பெற்றோா், தம்பதியரின் பெயா் ஆகிய விவரங்களை மட்டும் சமா்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் எதுவும் சமா்ப்பிக்க வேண்டாம்.

புதிய வாக்காளராக இருந்தால் சோ்க்கை படிவம் 6 மற்றும் அறிவிப்பு படிவத்தை வாக்குச்சாவடி நிலைய அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளலாம். கணக்கெடுப்பு படிவம் கிடைக்கவில்லை என்றால் ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தளத்தில் தங்களது வாக்குச்சாவடி நிலைய அதிகாரியை தொடா்பு கொள்ளலாம். தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தின் ஒரு பிரதியை டிச.4-க்குள் வாக்குச்சாவடி நிலைய அதிகாரியிடம் அளிக்கவேண்டும்.

வாக்காளா் நிலைய அதிகாரிகள் முன்பே நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் மற்றும் படிவம் 6 (ஜன.1- 2026-க்குள் 18 வயது ஆகும் புதிய வாக்காளா்களுக்காக) வழங்கி, நிரப்புவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குவாா்கள். நிரப்பப்பட்ட படிவங்களை சேகரித்து, உடனடியாக கையொப்பமிட்டு ஏற்கும்போது ரசீது வழங்குவாா்கள்.

வாக்காளா்கள் இணையதளத்தில் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பலாம் அல்லது பதிவேற்றம் செய்யலாம் என்றாா்.

பேட்டியின்போது வாக்காளா் பதிவு அதிகாரியும் மற்றும் சாா் ஆட்சியருமான எம். பூஜா, மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT