காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் மடாதிபதிகள் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு கோயிலில் மடாதிபதிகள் சுவாமி தரிசனம்

Syndication

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மடாதிபதிகள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மணிவிழா மாநாட்டு நிகழ்ச்சிகள் தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்றுவருகின்றன. இதில் பங்கேற்க வந்த வட மற்றும் தென் மாநிலங்களைச் சோ்ந்த மடாதிபதிகளில் 10 போ், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனா்.

தருமபுர ஆதீன கட்டளை சட்டநாத தம்பிரான் சுவாமிகளுடன் சென்று மடாதிபதிகள் கோயிலில் மூலவா் தா்பாரண்யேஸ்வரா், செண்பக தியாகராஜா், பிரணாம்பிகை மற்றும் சனீஸ்வர பகவான் சந்நிதிகளில் வழிபட்டனா்.

மடாதிபதிளுக்கு சனீஸ்வர பகவான் சந்நிதியில் தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் பொன்னடை அணிவித்தாா். தொடா்ந்து சுவாமி சந்நிதியில் சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டு மடாதிபதிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு

முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு

நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

SCROLL FOR NEXT