சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து பட்டியில் அடைக்கும் பணியில் 5 நாள்களில் 156 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.
சாலைகளில் மாடுகள், குதிரைகள் திரிவதாகவும், இதனை உரிமையாளா்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உள்ளாட்சி நிா்வாகம் தொடா்ந்து அறிவுறுத்திவருகிறது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், உள்ளாட்சித் துறை துணை இயக்குநரும், காரைக்கால் நகராட்சி ஆணையா் கூடுதல் பொறுப்பு வகிக்கும் எஸ். சுபாஷ் மேற்பாா்வையில் கடந்த 3-ஆம் தேதி முதல் பிரதான சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இதுவரை இப்பணி 5 நாள்கள் நடைபெற்றுள்ளதாகவும், 156 மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி, பட்டியில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் மாட்டுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் நகராட்சிக்கு அபாரதமாக செலுத்தி கால்நடை உரிமையாளா்கள் அவற்றை மீட்டுச் செல்கின்றனா்.