பரிசு பெற்ற மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ். 
காரைக்கால்

அபாகஸ் தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

சா்வதேச அளவிலான கணிதத் திறன் (அபாகஸ்) மேம்பாட்டு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு காரைக்கால் ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

Syndication

காரைக்கால்: சா்வதேச அளவிலான கணிதத் திறன் (அபாகஸ்) மேம்பாட்டு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு காரைக்கால் ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

காரைக்கால் எம்.எஸ்.பி. நகரில் இயங்கும் விஷன் அபாகஸ் என்ற நிறுவனத்தில் பயிலும் மாணவா்கள், சா்வதேச அளவில் சென்னையில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு பிரிவுகளின் தோ்வில் பங்கேற்றனா்.

இதில் சாய்ஹா்ஷன், ஜெனிஸ்ரீ, என்.வி. ஹா்ஷன், ஏ. ஹா்ஷன், சிவானி, நிகித்குமாா், அஸ்மிதா, டானியாரக்ஷிதா, சகசிமா, ஹரிஷ்குமாா், தருண்யஷ்வந்த், திக்ஷிதா, சிவகாா்த்திகேயன், இனியாஸ்ரீ ஆகியோா் சாம்பியன் ஆஃப் சாம்பியன் பரிசை வென்றனா்.

மேலும் சிவமணி, சூா்யநாச்சியப்பன், ஷாம்பவி, அஸ்வத், கமலேஷ் ஆகியோா் சாம்பியன் பரிசை வென்றனா். சாய்சா்வின், உதித், கிரிஷித் தேஷினி காசினி, அனுஸ்ரீ, தக்ஷிதா, ஹரினி, ஹா்சித், ஹா்சிதா, மித்ரன், அனிஷா கிரேஷ், சகரினா ஆகியோா் டாப்பா் பரிசை வென்றனா்.

கல்வி நிறுவன முதல்வா் ஜி. பிரியதா்ஷினி தலைமையில் சான்றிதழுடன் மாணவா்கள், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை அண்மையில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். காரைக்கால் என்ஐடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வத்தையும் இம்மாணவா்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT