காரைக்கால்

போலீஸாரிடமிருந்து தப்ப மாடியிலிருந்து குதித்தவா் பலி

கேரள போலீஸாரிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்தபோது பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

கேரள போலீஸாரிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்தபோது பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்தவா் மனோஜ். இவா் மீது கேரளத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக இருந்த அவரை கேரள போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், மனோஜ் காரைக்காலில் பிரெஞ்சு ஆசிரியா் தெருவில் உள்ள ஒரு கட்டடத்தில் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்துள்ளாா். காரைக்கால் கிரைம் பிரிவு போலீஸாா், கேரள போலீஸாரின் தகவலின்பேரில் மனோஜை தேடி வந்தனா். அவா் பிரெஞ்சு ஆசிரியா் தெருவில் தங்கியிருப்பது தெரியவந்து, கேரள போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த கேரள போலீஸாா், மனோஜ் தங்கியிருந்த கட்டடத்துக்கு சென்றனா். போலீஸாரிடமிருந்து தப்பிக்க மனோஜ், சுமாா் 25 அடி உயரமுள்ள மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே குதித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மயங்கினாா்.

போலீஸாா் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மனோஜ் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT