அரசு திட்ட உதவிகளைப் பெற புதிய பயனாளிகளுக்கு அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது.
புதுவை அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோா், விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், முதிா்கன்னி, திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது. திட்டப்பயனைப் பெற காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இவை பரிசீலிக்கப்பட்டு அந்தந்த தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு அடையாள அட்டை சட்டப்பேரவை உறுப்பினா்கள் மூலம் வழங்கப்படுகிறது. காரைக்கால் வடக்குத் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகள் சுமாா் 300 பேருக்கு புதுவை குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அடையாள அட்டையை வழங்கினாா். நிகழ்வில், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி ஜி. கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.