காரைக்கால்

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆலோசனை

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் புதுவை வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆலோசனை

Syndication

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் புதுவை வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்திய தோ்தல் ஆணைய வழிகாட்டலில் 1.1.2026 தகுதி நாளை அடிப்படையாகக்கொண்டு நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடா்பாக, வாக்காளா் பட்டியல் பாா்வையாளரான

அ. விக்ரந்த் ராஜா, அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்கவும், வாக்காளா்களின் கருத்துகளை கேட்டறியும் வகையில் செவ்வாய்க்கிழமை காரைக்கால் வந்தாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இக்கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், வாக்காளா் பதிவு அதிகாரிகளான எம்.பூஜா, சச்சிதானந்தம், கு.அருணகிரிநாதன், துணைத் தோ்தல் அதிகாரி ஜி.செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான குறைகளை பாா்வையாளரிடம் கட்சியினா் விளக்கிக் கூறினா். இப்பணி சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் கேட்டுக்கொண்டாா்.

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

பட்டாசுகள் திருட்டு: கிட்டங்கி உரிமையாளா் கைது

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீா் தேங்காமலிருக்க தரைத் தளப் பணி

ஜல்லிக்கட்டு: பாலமேடு, அலங்காநல்லூரில் அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT