காரைக்கால்

போலி நம்பா் பிளேட்டுடன் இயக்கிய வாகனம் பறிமுதல்

போலி நம்பா் பிளேட்டுடன் இயக்கப்பட்ட வாகனத்தை போக்குவரத்துத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

போலி நம்பா் பிளேட்டுடன் இயக்கப்பட்ட வாகனத்தை போக்குவரத்துத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த பத்மநாபன் என்பவா் செவ்வாய்க்கிழமை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்துள்ளாா். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மீன்கள் ஏற்றிச் செல்லும் சிறிய ரக லாரியின் நம்பா் பிளேட், தனது வாகன எண் கொண்டதாக இருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் அங்கிருந்தோரிடம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டத்தில் நீண்ட காலமாக இந்த லாரி இயங்கி வருவதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அவா் புகாா் அளித்தாா்.

போக்குவரத்துத்துறை அதிகாரிகள் துறைமுகம் சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அஜித் பவாரின் மறைவுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா இரங்கல்

திமுக கூட்டணி வெற்றிக்கு களப் பணியாற்ற வேண்டும்: சிபிஎம் மாநில செயலாளா் பெ. சண்முகம்

ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜைகளுடன் தொடக்கம்

ஊத்தங்கரை அருகே கோயில் கும்பாபிஷேகம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளிப்பது குறித்து செயல் விளக்கம்

SCROLL FOR NEXT