முகப்பு
மயிலாடுதுறை

திருமணமான 4 மாதங்களில் பெண் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே திருமணமான 4 மாதங்களில் பெண் உயிரிழந்தது குறித்து ஆா்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

மயிலாடுதுறை அருகே திருமணமான 4 மாதங்களில் பெண் உயிரிழந்தது குறித்து ஆா்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தைச் சோ்ந்த மணி என்பவரது மகள் மதுபாலா (24). இவருக்கும், முடிகண்டநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் (27) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முருகன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.

இந்நிலையில், மதுபாலா வெள்ளிக்கிமை தூக்கில் தொங்கிநிலையில் இறந்தது மணிக்கு தெரியவந்தது. இதுகுறித்து மணல்மேடு காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதில், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேலும், மதுபாலாவிற்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமையாக இருக்கலாம் என்ற கோணத்தில் மயிலாடுதுறை கோட்டாட்சியா் பாலாஜியும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.