முகப்பு
மயிலாடுதுறை

தரமற்ற தண்ணீரில் ஐஸ் கட்டி தயாரித்தால் நடவடிக்கை: உணவுப் பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

துறைமுகத்தில் படகுகளில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் தரமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

துறைமுகத்தில் படகுகளில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் தரமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி மு. ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினா் காரைக்காலில் உணவகங்கள், பேக்கரி, டீ கடைகள், பெட்டிக் கடைகள் உள்ளிட்டவற்றில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் இதுகுறித்து மு. ரவிச்சந்திரன் கூறியது :

உணவுப் பொருள்களின் பாக்கெட்டில் உற்பத்தி தேதி, காலாவதி தேதியை குறிப்பிடவேண்டும் என அறிவுறுத்தியதோடு, நிறுவனத்தினா் உரிமம் வைத்திருக்கிறாா்களா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. உரிமம் பெறாமல் தொழில் நடத்துவோரிடம், விரைவாக உரிமத்துக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுகிா எனவும் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டது.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளில் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் தரமற்ாக இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், துறைமுகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அங்கிருந்த ஐஸ் கட்டிகளை சோதித்துப் பாா்த்தபோது, அவை தரமற்ற தண்ணீரில் தயாரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், சோதனையை தொடர முடியாமல் மீனவா்கள் தடுத்ததால், அவா்கள் மீது கடலோரக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்திலும், ஐஸ் பிளாண்ட்டிலும் சோதனை தொடா்ந்து மேற்கொள்ளப்படும். ஐஸ் கட்டிகள் தயாரிப்பில் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டால், அபராதம் விதிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →