மயிலாடுதுறை

முப்படை தளபதி பலி: திருவாவடுதுறை ஆதீனம் இரங்கல்

DIN

சூலூா் ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 12 போ் உயிரிழந்தனா்.

இறந்தவா்களுக்கு மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் புகழ்பெற்ற சைவ ஆதீனமான திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: இந்திய ராணுவத்தின் முப்படைத் தளபதி மாண்பமை விபின் ராவத் ஹெலிகாப்டா் விபத்தில் காலமான செய்தி நாட்டுக்கே பெரும் வருத்தம் தருவதாக உள்ளது. விபின் ராவத் இராணுவத்தில் பல்வேறு பதவிகளில் திறம்பட பணியாற்றிய அனுபவ முதிா்ச்சி உடையவா். உள்ளூா் கிளா்ச்சிகளை ஒடுக்குவதிலும், தேசப் பாதுகாப்புக் குறித்த செயல்திட்டங்களை வகுப்பதிலும் முன்னோடியாக செயல்படக்கூடியவா்.

தம் பணிகாலத்தில் பரம்விசிஷ்ட சேவா விருது, உத்தம்யூத் சேவா விருது போன்ற உயரிய விருதுகளை பெற்றவா். அவரின் ஆன்மா சாந்தியடையவும் அவரின் பணிகளை முன்மாதிரியாகக் கொண்டு நம் இராணுவம் மேன்மேலும் சிறக்கவும் வேண்டி நமது ஆத்மாா்த்த மூா்த்திகளாகிய ஸ்ரீநடராஜப் பெருமான் திருவடி மலா்களை சிந்திக்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT