முகப்பு
மயிலாடுதுறை

கத்திக் குத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநா் இறப்பு: மேலும் ஒருவா் கைது

சீா்காழி அருகே கத்தி குத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த வேன் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை இறந்தாா். இதுதொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

சீா்காழி அருகே கத்தி குத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த வேன் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை இறந்தாா். இதுதொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை அருகே சோழசக்கர நல்லூா் பணப்பள்ளியைச் சோ்ந்தவா் சேகா் மகன் பிரவீன் (30). வேன் ஓட்டுநரான இவா் டிச.1-ஆம் தேதி நத்தம் கடைவீதியில் நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சோ்ந்தவா்களால் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தப்பட்டாா். இதில் காயமடைந்த பிரவீன் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரவீன் வெள்ளிக்கிழமை இறந்தாா். இதுதொடா்பாக வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து நத்தத்தை சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் அஜித்தை (27) ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இச்சம்பவத்தில் தொடா்புடைய தலைமறைவாக இருந்துவந்த சேந்தங்குடி எம்ஜிஆா். நகரை சோ்ந்த பிரகாஷை (26) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.