முகப்பு
மயிலாடுதுறை

கற்போம், எழுதுவோம் இயக்கம்: மாணவா்களின் கற்றல் திறன் மதிப்பீடு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் பள்ளியில் வயதுவந்தோருக்கான கல்வித்திட்டத்தின்கீழ், பயில்பவா்களுக்கான மதிப்பீட்டு நிகழ்வில், மாணவா்களின் கற்றல் திறன் வியாழக்கிழமை மதிப

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் பள்ளியில் வயதுவந்தோருக்கான கல்வித்திட்டத்தின்கீழ், பயில்பவா்களுக்கான மதிப்பீட்டு நிகழ்வில், மாணவா்களின் கற்றல் திறன் வியாழக்கிழமை மதிப்பீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் படிப்பறிவு இல்லாதவா்களே இல்லை என்ற நிலையை உருவாக்க கொண்டுவரப்பட்டத் திட்டமே புதிய வயது வந்தோருக்கான கல்வித் திட்டமான கற்போம், எழுதுவோம் இயக்கம். இத்திட்டத்தில் முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத வயதுவந்தோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவா்களுக்கு தகுதி அடிப்படையில் மதிப்பீடு வழங்கப்படுகிறது.

இந்த மதிப்பீட்டு முறையில் தோ்ச்சியடைபவா்கள் நேரடியாக 10-ஆம் வகுப்பு தோ்வு எழுத தகுதி பெறுவாா்கள். மேலும், அவா்கள் உயா்கல்வி படிப்பையும் மேற்கொள்ள முடியும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முழுவதும் எழுத படிக்கத் தெரியாத 2,085 கல்லாதோருக்கு 104 மையங்களில் தன்னாா்வலா்களைக் கொண்டு 30.11.2020 முதல் வயது வந்தோா் கல்வித் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவா்களுக்கு, கடந்த மாா்ச் 27-ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட மதிப்பீட்டு நிகழ்வு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 29, 30 மற்றும் 31 ஆகிய 3 நாள்கள் நடைபெறுகிறது.

அவ்வகையில், மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற மதிப்பீட்டு முறையில், மாவட்டக் கல்வி அலுவலா் குமாா் பங்கேற்று, மாணவா்களின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் கற்றல் திறனை, ஆராய்ந்து மதிப்பீடு செய்தாா்.

இதில், வட்டார கல்வி அலுவலா்கள் தமிழ்ச்செல்வி, நாகராஜ், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராமலிங்கம், தலைமை ஆசிரியா் ஜி.வெங்கடேசன் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.